top of page

Supporting our elders

Distribution of Essential Items, Sri Lanka

இன்றையதினம் சற்குரு ஸ்ரீ சரவணபாபா ஆசியுடன், அவரது 42வது ஜெயந்தி தின தார்மிகச் சேவைக்காக லண்டன் நாட்டின் ஓம் சரவணபவ சேவா அறக்கட்டளையின் மூலம் வழங்கிய ரூபா 1,35,000 நிதி அன்பளிப்பில் மாங்குளம் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்ட மற்றும் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள Covid 19 காரணமாக அன்றாட உணவிற்கு அல்லல்பட்டு தனிமையில் வாழும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருமுறிகண்டி, கனகராயன்குளம், ஓமந்தை, ஒலுமடு, வன்னிவிளாங்கும், மாங்குளம், ஒட்டுசுட்டான், கிழவன்குளம், பனிக்கன்குளம் ஆகிய இடங்களைச் சேர்ந்த 45 முதியோர்களுக்கு இன்றைய தினம் தலா ரூபா 2,500 பெறுமதியில் உலர் உணவு பொருட்களும் அத்துடன் 500 ரூபா பணமும் வழங்கப்பட்டுள்ளது.


இந்த தார்மீகப்பணிக்கு முன்னின்று உதவிய வட்டுக்கோட்டை இந்து வாலிப சங்கத்திற்கும் இந்த அறப்பணிக்கு நிதி உதவி வழங்கிய லண்டன் பக்தர்களுக்கும் ஓம் சரவணபவ சேவா அறக்கட்டளை சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

bottom of page